எக்ஸ்பிரஸ் செய்திகள்வணிக செய்திகள்

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1360 குறைந்தது ஆபரணத் தங்கம் விலை!

Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு வாரத்தில் ரூ.1360 குறைந்துள்ளது.

உலகளாவிய சந்தை நிலவரம், பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றை முன் வைத்து ஆபரணத் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவ்வப்போது அதிரடியாக விலையில் ஏற்றம் கண்டு வந்தாலும் அதை வாங்கும் ஆர்வம் குறையவில்லை.

இந் நிலையில்,சென்னையில் ஆபரணத் தங்கம் கடந்த 7 நாட்களில் விலை சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு சவரன் ரூ.75000த்தை கடந்ததால் தங்கம் விலை அதன் பின்னரும் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்துள்ளது. ஆக.9ம் தேதி ஒரு சவரன் ரூ.75,560 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்து வந்த நாட்கள் (ஆக.9 முதல் ஆக.16) வரை தங்கம் விலையில் தொடர்ந்து இறங்குமுகமே காணப்பட்டது.

ஆக.9ம் தேதி ஒரு சவரன் ரூ.75,560 என்ற நிலையில் இருந்த தங்கம், இன்றைய தினத்தில் ரூ.74,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1360 சரிந்துள்ளது. மாதத்தின் முதல் வாரத்தில் எகிறிய தங்கம், இரண்டாவது வாரத்தில் சரிந்து காணப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.9275 ஆக விற்கப்படுகிறது. சவரன் ரூ.40 குறைந்து ரூ.74,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதுள்ள சூழலில் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படும். பண்டிகை கால தொடக்கத்தில் விலை நிர்ணயத்தில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆக.9 முதல் ஆக.16 வரை தங்கம் (ஒரு சவரன்) விலை நிலவரம்;

ஆக.9-ரூ.75,560

ஆக.10-ரூ.75,560

ஆக.11-ரூ.75,000

ஆக.12-ரூ.74,360

ஆக.13-ரூ.74,320

ஆக.14-ரூ.74,320

ஆக.15-ரூ.74,240

ஆக.16(இன்று)-ரூ.74,200

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *