பயன்பாட்டுக் கட்டணத்தை 2 ரூபாய் உயர்த்தியது ஸ்விக்கி!
பயன்பாட்டுக் கட்டணத்தை உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி 2 ரூபாய் உயர்த்தி உள்ளது.
இணையவழி மூலமாக உணவு வினியோகம் செய்யும் நிறுவனம் ஸ்விக்கி. இந்த நிறுவனத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களுக்கு வேண்டிய உணவை ஆர்டர் செய்கின்றனர். மக்களிடம் பரவலாக வரவேற்பை பெற்றுள்ள ஸ்விக்கி நிறுவனம் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தற்போதுள்ள கட்டணமான ரூ.12 என்பது ரூ.14 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
பண்டிகை காலத்தில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை மனதில் கொண்டு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக் கட்டணம் மெல்ல, மெல்ல உயர்த்தப்பட்டு வருகிறது.
பயன்பாட்டுக் கட்டணம் என்பது என்ன
ஒவ்வொரு முறை உணவு ஆர்டர் செய்யும்போதும் இந்த கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது ஸ்விக்கி மொபைல் செயலியை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்வதற்கான கட்டணம் என்று புரிந்து கொள்ளலாம்.