எக்ஸ்பிரஸ் செய்திகள்சினிமா செய்திகள்

ரூ.7 கோடி முதலீடு, ரூ.90 கோடி லாபம்; 2025ல் நாட்டிலேயே அதிக வசூல் படைத்த டூரிஸ்ட் பேமிலி

Spread the love

2025ம் ஆண்டு இந்திய சினிமா வரலாற்றில் அதிக லாபத்தை அள்ளிய படமாக டூரிஸ்ட் பேமிலி படம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்களை ஓரம்கட்டி லாபத்தை அள்ளிக் கொடுக்கும். எப்போதாவது நடக்கும் இதுபோன்ற மாயாஜாலம் 2025ம் ஆண்டு இந்திய சினிமாவில் நிஜமாகி இருக்கிறது.

அப்படி ஒரு பெருமையையும், ஆச்சரியத்தையும் தந்திருக்கிறது டூரிஸ்ட் பேமிலி என்ற தமிழ்ப்படம். படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர் என்ற அடையாளத்தை ஏற்கனவே திரைத்துறையில் பெற்றவரான சசிக்குமார், சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தயாரிப்பு செலவு ரூ.7 கோடி மட்டுமே. ஆனால் உலகம் முழுவதும் கிடைத்த லாபம் ரூ.90 கோடி. அதாவது முதலீட்டு தொகையை விட 1200 சதவீதம் அதிகம்.

2025ம் ஆண்டு இந்திய திரைப்பட வரலாற்றில் எந்த ஒரு படமும் இபபடி ஒரு வசூல் சாதனையை பிடித்தது இல்லை என்கிறது சாக்நில்க் என்ற நிறுவனம். இந்த நிறுவனம், திரைப்படங்களின் தரவுகள் பற்றிய விவரங்களை வெளியிடும் ஒரு நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *